பாரிஸ் ஒலிம்பிக்ஸ் | 22 வயதில் இந்தியாவை ஒலிம்பிக் மெடல் டாலியில் ஏற்றிய மனு பாக்கர்!

First-Indian-Women-To-Win-An-Olympic-Shooting-Medal-Manu-Bhaker-TNPSC-Contenders


மனு பாக்கர், ஒரு ஓரளவிற்கான மிடில் கிளாஸ் குடும்பம் தான், சிறு வயதில் இருந்தே பல விளையாட்டுகளில் ஆர்வம் காட்டியவர், துப்பாக்கி சுடுதல் மட்டும் அல்லாமல், இவருக்கு டென்னிஸ், கராத்தே மற்றும் ஒரு சில தற்காப்பு கலைகளும் அத்துப்பிடி.

ஒரு கட்டத்திற்கு பின்னர் ஒரே விளையாட்டில் கவனம் செலுத்துவோம் என எண்ணி கையில் எடுத்த விளையாட்டு தான் துப்பாக்கி சுடுதல், அதில் தன்னுடைய 14 வயதில் உலக அரங்கில் தன்னுடைய முதல் பதக்கத்தை பதிவு செய்த மனு பாக்கர் அடுத்தடுத்து உலகளாவிய மேடைகளில் பதக்கங்களை அள்ளி குவித்தார்.

அனைத்து சர்வதேச மேடைகளிலும் பதக்கங்களை அள்ளி குவித்த பிறகு, ஒலிம்பிக் என்னும் ஒரு மேடை மட்டும் இவருக்கு மிச்சம் இருந்தது. தற்போது அந்த குறையும் அவருக்கு தீர்ந்து இருக்கிறது. பாரிஸ் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர்பிஸ்டல் பிரிவில் மூன்றாவது இடம் பிடித்து இந்தியாவிற்கு முதல் பதக்கத்தை வென்று கொடுத்து இந்தியாவை மெடல் டாலியில் ஏற்றி இருக்கிறார்.


“ 12 வருடங்களுக்கு பிறகு இந்தியா துப்பாக்கி சுடுதலில் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்று இருக்கிறது, முதல் முறையாக ஒரு இந்திய பெண்மணி ஒலிம்பிக்கில் துப்பாக்கி சுடுதலில் பதக்கம் வென்று இருக்கிறார் “