பாரிஸ் ஒலிம்பிக்ஸ் | ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு மெடல், சாதனை புரிந்தார் மனு பாக்கர்!

பாரிஸ் ஒலிம்பிக்ஸ்சில் இரண்டாவது மெடலை வென்று புதிய சாதனை புரிந்து இருக்கிறார் மனு பாக்கர்.
பாரிஸ் ஒலிம்பிக்ஸ்சில், 10 மீ ஏர் பிஸ்டல் மிக்ஸ்டு டீம் பிரிவில், மனு பாக்கர் மற்றும் சரப் ஜோத் சிங் ஜோடி அபாரமாக விளையாடி வெண்கலம் வென்று இருக்கிறது. இதன் மூலம் இந்தியாவின் மெடல் டாலியில் மற்றுமொரு வெண்கல பதக்கம் சேர்ந்து இருக்கிறது. தற்போது வரை இந்தியாவின் கணக்கில் இரண்டு வெண்கல பதக்கங்கள் சேர்ந்து இருக்கின்றன.
“ ஏற்கனவே துப்பாக்கி சுடுதலில் முதல் ஒலிம்பிக் பதக்கம் வென்ற பெண்மணி என்ற பெருமையோடு, ஒரே ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்ற வீரர் என்ற பெருமையையும் தன்வசப்படுத்தி இருக்கிறார் மனு பாக்கர் “