பாரிஸ் ஒலிம்பிக்கில் கெத்து காட்டிய 51 வயதான யூசுப் டிகெக்!

பாரிஸ் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் சில்வர் பதக்கம் வென்று இருக்கும் துருக்கியின் யூசுப் டிகெக் இணையத்தில் வைரலாகி வருகிறார்.
பொதுவாகவே துப்பாக்கி சுடுதலுக்கு வரும் வீரர், பல தரப்பட்ட பாதுகாப்பு உபகரணங்களோடும், காதில் இரைச்சல் கேன்சலரோடும், கண்களில் உருப்பெருக்கியோடும் வந்து நின்று சுடுவது தான் வழக்கம். அது தான் அவர்களை ஸ்டைலிஸ்சாகவும் காண்பிக்கும். ஆனால் துருக்கியை சேர்ந்த 51 வயது வீரரான யூசுப் டிகெக் இது எதுவும் இல்லாமல் வெறும் சாதாரண கண்ணாடி மட்டும் அணிந்து கொண்டு, கெத்தாக ஒரு கையை பையில் வைத்துக் கொண்டு, சரியாக குறி வைத்து சுட்ட விதம் ரசிகர்களை கவர்ந்து இருக்கிறது.
அவர் சாதாரணமாக வெத்து கெத்து மட்டும் காட்டவில்லை, அதே கெத்துடன் துருக்கி நாட்டிற்காக ஒரு சில்வர் பதக்கத்தையும் வென்று கொடுத்து இருக்கிறார். துருக்கி துப்பாகி சுடுதலில் வெல்லும் முதல் பதக்கம் இதுவாகும். தனது 51 வயதில் யூசுப் டிகெக் களத்தில் செய்து இருக்கும் இந்த தஃக் செயலுக்கு இணையவாசிகள் பயர் விட்டு வருகின்றனர்.
“ சாதனைகளுக்கும், ஸ்டைலுக்கும், கெத்துக்கும் வயது தடை இல்லை என்பதை நிரூபித்து இருக்கிறார் யூசுப் டிகெக் “