பாரிஸ் ஒலிம்பிக்கில் இந்தியாவிற்கு முதல் பதக்கம்!

பாரிஸ் ஒலிம்பிக்கில் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்தியாவிற்கு முதல் பதக்கம் கிடைத்து இருக்கிறது.
நடப்பு பாரிஸ் ஒலிம்பிக்கில் 10 மீட்டர் ஏர்பிஸ்டல் மகளிர் பிரிவில், இந்தியாவின் மனு பாக்கர் வெண்கலம் வென்று சாதனை படைத்து இருக்கிறார். கிட்ட தட்ட 12 வருடங்களுக்கு பிறகு இந்தியா துப்பாக்கி சுடுதல் பிரிவில் பதக்கம் வென்று இருப்பது குறிப்பிடத்தக்கது.
“ ஒலிம்பிக்கில், மகளிர் துப்பாக்கி சுடுதல் பிரிவில் இந்தியா முதன்முறையாக பதக்கம் வென்று இருக்கிறது. பதக்கம் வென்ற மனு பாக்கருக்கு இணையம் முழுக்க வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது “