Paris Olympics | ’அன்று ஒரு ஈட்டி வாங்க கூட பணமில்லை, இன்று ஒலிம்பிக்கில் தங்க மெடல், சாதித்த அர்ஷத் நதீம்’

அன்று ஒரு ஈட்டி வாங்க கூட பணமில்லாமல் சமூக வலைதளங்களில் யாராவது உதவி செய்ய முடியுமா எனக் கேட்டுக் கொண்டு இருந்த அர்ஷத் நதீம் இன்று ஒலிம்பிக்கில் தங்க மெடல் வாங்கி உலகையே திரும்பி பார்க்க வைத்து இருக்கிறார்.
பாகிஸ்தானில் இருந்து ஒலிம்பிக்கிற்கு 7 பேர் பாரிஸ் வந்து இறங்குகின்றனர். 6 பேர் முதல் சுற்றிலேயே வெளியேறி பாகிஸ்தான் பயணிக்கின்றனர். ஆனால் ஒருவர் மட்டும் அந்த தேசத்திற்கே நம்பிக்கை கொடுக்கிறார். அவர் தான் ஈட்டி எறிதல் வீரர் அர்ஷத் நதீம். கடந்த ஜனவரியில் ஒரு பாகிஸ்தான் விளையாட்டு வீரரின் பதிவு இணையத்தில் வைரலாகுகிறது. அது என்னவென்றால் எனக்கு ஈட்டிக்காக 85,000 தேவைப்படுகிறது யாராவது ஸ்பான்சர் செய்யுங்கள் என்று அர்ஷத் நதீம் பதிவிட்ட பதிவு தான் அது.
உடனடியாக பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் நதீம் அவர்களை தொடர்பு கொண்டு அவருக்கு வேண்டிய உதவிகளை செய்து கொடுக்கிறது. அவரும் தீவிரமாக பயிற்சிகளை மேற்கொள்கிறார். சரியான கிட் இருக்காது. பயிற்சிக்கான சூழல் இருக்காது. ஸ்பான்சர் செய்ய பெரிய பெரிய கம்பெனிகள் இருக்காது. ஆனாலும் ஒன்றே ஒன்று மட்டும் இருக்கும் தேசத்திற்காக எதையாவது செய்ய வேண்டும் என்றதொரு எண்ணம் மட்டும் நதீம் அவர்களிடம் இருந்து கொண்டே இருக்கும்.
பாரிஸ் ஒலிம்பிக் வருகிறது, நதீம் தன்னுடைய அசாத்திய திறனால் நேரடியாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெறுகிறார். ஒட்டு மொத்த இந்தியா பாகிஸ்தானும் ஈட்டி எறிதலுக்கான இறுதிப்போட்டியை ஒலிம்பிக் போட்டிய ஒன்றாக தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டு இருந்தது. ஒரு பக்கம் நீராஜ் சோப்ரா, இன்னொரு பக்கம் அர்ஷத் நதீம், அது என்னவோ தெரியவில்லை இருவருக்கும் இரு நாடுகளிடமும் இருந்து ஆத்ரவு வலுத்தது.
இறுதியாக அர்ஷத் நதீம் ஈட்டியை அஸ்திரங்கள் போல கைகளில் இருந்து எறிந்து 92.97 மீட்டர் தூரம், அதாவது இதற்கு முன்னர் பெரிய பெரிய ஜாம்பவான்கள் வைத்து இருந்த ரெக்கார்டுகளை எல்லாம் தகர்த்து தங்கத்தை தன் வசப்படுத்தினார். நீராஜ் சோப்ரா 89.45 மீட்டர் தூரம் எறிந்து சில்வரை தன்வசப்படுத்தினார். இரு நாடுகளையும் பொறுத்தமட்டில் இருவருமே சாம்பியன்கள் தான். இந்த இரு சாம்பியன்களின் நட்பு இரு நாடுகளை ஒன்றாக இரண்டு வெற்றிகளை ஒரு வெற்றியாய் கொண்டாட வைத்து இருக்கிறது.
” ஒரு போட்டியும் இருவரின் நட்பும் இருவரின் வெற்றியும் இரண்டு நாடுகளை ஒன்றாக கொண்டாட வைத்து இருப்பதில் பெருமிதமே “