Paris Olympics | ஸ்பெயினை வீழ்த்தி வெண்கலம் வென்றது இந்திய ஹாக்கி அணி!

பாரிஸ் ஒலிம்பிக்கில் ஸ்பெயின் அணியை வீழ்த்தி இந்திய ஆடவர் ஹாக்கி அணி வெண்கலம் வென்று இருக்கிறது.
பாரிஸ் ஒலிம்பிக்கின் வெண்கலத்திற்கான போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி, ஸ்பெயின் அணியை எதிர்கொண்டது. முதலில் ஸ்பெயின் அணியின் ஸ்கிப்பர் மார்க் மிரால்ஸ் தான் கோல் கணக்கை துவங்கினார். ஆனாலும் கூட, அதற்கடுத்து இந்திய அணியின் ஸ்கிப்பர் ஹர்மன் ப்ரீத் சிங் அதிரடி காட்டி இரண்டு கோல்களை க்ளீன் ஹிட்டில் அடித்து இந்திய அணியின் வெற்றிக்கு வித்திட்டார்.
ஆட்டத்தை முழுக்க முழுக்க இந்திய அணி தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்து இருந்ததால் மட்டுமே இந்த வெற்றி சாத்தியமானது. ஜெர்மனியுடனான ஆட்டத்தில் செய்த தவறை, இந்திய அணி இந்த ஆட்டத்தில் சரி செய்து கொண்டது. ஆடிய அத்துனை வீரர்களும் பதற்றத்தில் எந்த தவறும் செய்யவில்லை. இறுதியாக 2-1 என்ற கணக்கில் இந்தியா ஸ்பெயினை வீழ்த்தி வெண்கல பதக்கத்தை வென்றது.
” இந்தியாவிற்கு இது நான்காவது மெடல். நான்குமே வெண்கல மெடல். தேசிய விளையாட்டில் ஒரு மெடல் கிடைத்து இருப்பது தேசத்தை பெருமைப் படுத்தி இருக்கிறது “