Paris Olympics | இறுதிப் போட்டி வரை சென்றும் தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்த வினேஷ் போகத்!

முதல் நாள் இரவு எடை 52 கிலோவாக அறியப்பட்டு இருக்கிறது. ஒரு வாய் உணவு கூட எடுத்துக் கொள்ளாமல் இரவு முழுவதும் கண் விழித்து கடுமையாக உடற்பயிற்சி மேற்கொண்டு இருக்கிறார் வினேஷ் போகத். இருந்தாலும் கூட அந்த முயற்சி கை கூடவில்லை.
இறுதிப் போட்டி நாளான இந்தியாவே வினேஷ் போகத்தின் ஆட்டத்தை எதிர்பார்த்து காத்து இருந்த போது ஒரு அதிர்ச்சி. சர்வதேச கமிட்டி வினேஷ் போகத்தின் எடையை பரிசோதித்த போது நிர்ணயிக்கப்பட்ட எடையை விட 100 கிராம் எடை அதிகமாக இருந்து இருக்கிறது.
அதனை சுட்டிக் காட்டிய சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி, அவரை ஆட்டத்தில் இருந்து நீக்கியது மட்டும் அல்லாது, அவரை ஒட்டு மொத்தமாக ஈவண்டில் இருந்து தகுதி நீக்கமும் செய்தது. அவ்வளவு தூரம் உழைத்து போராடி இறுதிப் போட்டி வரை சென்றும் கூட தங்கம் வெல்லும் வாய்ப்பை இழந்து நிற்கிறார் வினேஷ் போகத்.
“ இதில் அரசியல் தலையீடு இருக்குமா, இல்லை சர்வதேச நாடுகளின் தலையீடு இருக்குமா, இல்லை ஏதேனும் சதி இருக்குமா என கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருக்காமல் இந்த நிமிடத்தில் வினேஷ் போகத்தின் பக்கம் ஆறுதலாய் ஒவ்வொரு ரசிகனும் நிற்க வேண்டும் அவ்வளவு தான் “