Paris Olympics | Vinesh Phogat | ‘யார் என்று தெரிகிறதா, இவள் தீ என்று புரிகிறதா, தடைகளை வென்று சரித்திரம் படைப்பவள் நியாபகம் வருகிறதா?’

Paris-Olympics-2024-Vinesh-Phogat-First-Ever-Indian-Female-Wrestler-To-Reach-Finals-In-Olympics-TNPSC-Contenders

விஸ்வரூபம் திரைப்படத்தில் ஒரு பாடல் வரும், யார் என்று தெரிகிறதா, இவள் தீ என்று புரிகிறதா, தடைகளை வென்று சரித்திரம் படைப்பவள் நியாபகம் வருகிறதா? என்ற வரிகள் தான், நிச்சயம் இன்று இந்த வரிகள் இந்திய வீராங்கனை வினேஷ் போகத் அவர்களுக்கு அப்படியே பொருந்துகிறது.

அன்று போராட்டக் களத்தில் நீதிக்காக நின்று போராடிய போது தன் நாட்டிற்காக தன்னையே அர்ப்பணித்து விளையாடுகிற விளையாட்டு வீரர் என்றும் கூட பார்க்காமல், இந்திய காவல்துறை வினேஷ் போகத் அவர்களை தரையில் தர தரவென இழுத்து சென்றது.

அந்த சமயத்தில் அவர் தரையில் விழுந்த போதும் கூட, அவரின் தேசப்பற்று, கையில் இருந்த இந்திய தேசிய கொடியை தரையில் வீழவே செய்யவில்லை, தேசம் பழித்தாலும், தேசப்பற்றை விடுவதாக இல்லை என்று தீரமாக இருந்த வினேஷ் போகத் இன்று பாரிஸ் ஒலிம்பிக்கின் சர்வதேச அரங்கில் இந்தியாவிற்கு ஒரு பதக்கத்தை உறுதி செய்து இருக்கிறார்.

” அவர் அடித்து துவைத்த வீராங்கணைகள் ஒவ்வொருவரும் உலகின் நம்பர் ஒன் நிலை வீராங்கணைகள், இனி மிச்சம் இருப்பது ஒரே ஒரு ஆட்டம் தான், அதிலும் வெற்றியை சூடி வினேஷ் போகத் இந்தியாவிற்கு தங்க மகளாக தான் வர வேண்டும் என்பது ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது “